J.A. George / 2021 மே 24 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (23) இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,210 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 5 பேரும், ஏப்ரல் 23 - மே 22 வரை 27 பேரும் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 - ஒருவர், மே 17 - ஒருவர், மே 18 - ஒருவர், மே 19 - 04 பேர், மே 20 - 10 பேர், மே 21 - 05 பேர், மே 22 - 05 பேர், மே 23 - 05 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்த 32 பேரில் 14 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago