2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உடுவே தம்மாலோக்க தேரருக்கு பிடிவிறாந்து

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுவே தம்மாலோக்க தேரரைக் கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (28) பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

பொல்ஹேன்கொட எலன் மெதினியாராம விகாரையில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி, பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்து, நபர் ஒருவரால் தம்மா​லோக்க தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமை காரணமாகவே அவரைக் கைதுசெய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உடுவே தம்மாலோக்க தேரர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில், அந்த வழக்கை அடுத்த மாதம் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X