2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு

Editorial   / 2018 டிசெம்பர் 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, ஆயிரம் ரூபாயாக உயர்த்தக்கோரி, மலையக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று (22) 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இரண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், நேற்று முன்தினமும் நேற்றும் மேலும் இரண்டு இளைஞர்கள் இணைந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் தொகை, அதிகரித்துள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல சிவில் அமைப்புகள், அனைத்து மத, மொழி இனத்தவர்களும், கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கூடி, அடையாள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X