Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 22 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் மோசடிகள் அற்றதாகவும் எந்தவித அரசியல் கலப்படங்கள் உட்புகாதவாறும் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் என்று, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அமைச்சர், தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (21) நடைபெற்றது.
அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என எதுவுமில்லை. எல்லா இனங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் பேதங்களின்றி உரித்துடையதே விளையாட்டு என்றார்.
விளையாட்டை, இலங்கையில் முன்னிலைப்படுத்துவதே தனது பிரதான இலட்சியமாகும் என்றும் இந்த இலட்சியத்தை அடைந்துகொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கோரினார்.
இன்று எல்லோரும் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரமே எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது தவறு என்றும் விளையாட்டுத்துறையில் எத்தனையோ அம்சங்கள் இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
விளையாட்டில் அரசியலை நுளைக்காமல் இருப்பதே தனது முதற்கட்ட நிலைப்பாடாகுமெனவும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதும், அதனை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதுமே தனது நோக்கமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், புதிய ஆண்டிலிருந்து விளையாட்டுத்துறையையும் புதிய உத்வேகத்துடன் புதிய பல அம்சங்களுடன் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025