Editorial / 2021 ஜனவரி 13 , மு.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஊழியர்கள் அநியாயமாக தொழிலை இழக்கும் போது வழங்கப்படும் ஆகக் கூடிய நட்டஈடுத் தொகையை 25 இலட்சம் ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தொழில் உறவுகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சிவ்வாவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நிறுவனங்கள் மூடப்படுவதால் ஊழியர்கள் தொழிலை இழக்கும் போதும், நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் போதும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆகக் கூடிய நட்டஈடுத் தொகையையே இவ்வாறு அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு 12ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள 1971ஆம் ஆண்டு 45ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது, சலுகை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும் என்பது அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈடுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தொழிலாளர்கள் பணிபுரிந்த காலத்தை கருத்திற்கொண்டு, நட்டஈடுத் தொகை தீர்மானிக்கப்படவுள்ளது.
எனவே, தற்போது உயர்ந்தபட்ச நட்டஈட்டுத் தொகையாக உள்ள 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, 25 இலட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்க தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .