2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘எனக்கு அநீதி இழைக்கப்பட்டது’

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செய்யாத குற்றத்துக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவற்றை நீதிமன்றத்தில் நிரூபித்து, தனக்கு அநீதி இழைத்து,  சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்து விட்டதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அமைச்சர்களான ​மனோ கணேசன் மற்றும் ரவி கருணாநாயக்கவும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோரிடம் கூறியுள்ளார்.   

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்வையிடுவதற்காக, மேற்படி அமைச்சர்கள், நேற்று (21) சென்றிருந்தனர்.   

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே, தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவருக்கு பதிலளித்துள்ள அமைச்சர்கள், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான தலைமைத்துவத்தை ஏற்றுப் பணியாற்ற முன்வருமாறு, அழைப்பு விடுத்துள்ளனர்.   

அத்துடன், தேரரின் உடல்நிலை முன்னேற்றத்துக்குப் பிரார்த்திப்பதாகக் கூறிய அமைச்சர்கள், கடந்த காலங்களில், சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறுகளை மறந்து, நாட்டுக்காக அவர்களுக்கு மன்னிப்பளித்து, நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப உதவுமாறும் அதற்கு தலைமைத்துவம் வகிக்குமாறும் கோரியுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .