Editorial / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
மனித உரிமைகளை மீறியதாக, இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் சிறந்த முறையில் முகம் கொடுக்கும் திறன் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான பதில்இ உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (2) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதேஇ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
2010, 2015ஆம் ஆண்டுகளில் போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், அப்போது எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டது.
இதன்போது எமக்கிடையில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன எனத் தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து, அப்போதைய வெளிவிவகார அமைச்சரால் 30/ 1 எனும் யோசனைக்கு இணை அனுசரணை வழங்கி, நாம் தவறு செய்ததால் ஏற்பட்ட பிரதிபலனையே இன்னும் அனுபவித்து வருகின்றோம் என்றார்.
இதற்கு, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் திலக் மாரப்பன தனது உரையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளரால் முன்வைக்கப்பட்ட சில நிபந்தனைகள், முன்மொழிவுகள் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.
பின்னர், எமது அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, 30/1 எனும் தீர்மானத்திலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் எனத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இம்முறை மனித உரிமைகள் அமர்வில் சரியானதை, விரிவாக முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பாக விஞ்ஞான அடிப்படையில் காரணங்களை முன்வைக்கும் திறன், கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago