2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து தமிழ்க் கட்சிகளும் இன்று முக்கிய தீர்மானம்

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக, தமிழ்மக்களின் 13 அம்ச கோரிக்கைகள்  அடங்கிய பொது ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் இன்று  (28) சந்தித்துப் பேசவுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் முற்பகல்  நடக்கும் இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

“யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, ஜனாதிபதி  தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .