2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஒன்றரை வருடத்தில் 3ஆம் முறை தீப்பரவல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொட்டலங்க, கஜீமா வத்தை பகுதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் மூன்று முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் பிரதீப் பெரேரா தெரிவித்தார்.

குறித்த குடியிருப்பில் நேற்று (27) 7.30 மணியளவில் தீ பரவியதையடுத்து கொழும்பு தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீப் பரவல் காரணமாக 80 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 300 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் வசிக்கும் சிலர் அரசாங்கத்திடம் இருந்து இரண்டு அல்லது மூன்று நிரந்தர வீடுகளைப் பெற்றாலும் இன்னமும் தோட்டத்திலேயே வாழ்ந்து வருவதாக கிராம உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இங்கு 20 குடும்பங்கள் மட்டுமே குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், 200 குடும்பங்கள் அனுமதியின்றி குடியேறியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்ட போதும் 2015ஆம் ஆண்டில் குறித்த 200 குடும்பங்களும் குடியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். 

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதிகளில் இருந்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவொன்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று (28) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X