Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருமித்த நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, அதிகாரப்பகிர்வு விடயம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தான் முன்வைக்கும் அனைத்து யோசனைகளும் தன்னுடைய யோசனைகளே என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
தனது அரசியல் வரலாற்றில் ஒருபோதும், நிபந்தனை அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, நிபந்தனைகளை முன்வைப்பதும் ஏற்றுக்கொள்வதும் இல்லை என்றார்.
புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் எமது பயணத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பேதங்கள் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மனிதத்துவத்துக்கு முதலிடம் கொடுக்கும் யுகமொன்றை உருவாக்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026