Lenin Raj / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலக்கரி விவகாரம் தொடர்பில் மேடைகளில் ஒலிவாங்கியின் முன்னால் கூச்சலிடுவதை தவிர்த்து, குறித்த விடம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் உண்மைனயை கூறுமாறு விவசாய பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
விவசாய பிரதி அமைச்சர் இன்று திங்கட் கிழமை 20 ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில், இப்போது மேடைகளில் மைக்குகளை உடைக்கும் வகையில் கூச்சலிடுவதை விடுத்து, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் உண்மைகளைக் கூறுங்கள். இதற்கு மேலதிகமாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. தேவைப்படுபவர்கள் அங்கேயும் சென்று தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.
உண்மையில் நிலக்கரி மோசடியைச் செய்தது யார் என்று பார்ப்போம். இந்த மோசடியைச் செய்தது தற்போதைய அரசாங்கமா? அல்லது வரலாற்றில் இருந்த அரசாங்கங்களா? என்பதை இதன் மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.'
இந்த விவகாரம் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் CID ஆகிய இரண்டு தரப்பும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, சட்டபூர்வமான விசாரணை அமைப்புகளிடம் ஆதாரங்களை வழங்குமாறு அவர் எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடுத்துள்ளார்.
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago