Kogilavani / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை, அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில் உள்ள வீதியில், திடீரெனத் தோன்றிய பள்ளத்துக்குள் காரொன்றும், பஸ்ஸொன்றும் கவிழ்ந்து இறுகிக்கொண்டன.
அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கிப் பயணித்த, 25ஜி பஸ்ஸே, வீதியில் திடீரென தோன்றிய பெரிய பள்ளத்துக்குள் சென்றுவிட்டது. அந்த பஸ்ஸுக்கு பின்னால் சென்றுகொண்டிருந்த காரொன்றும், பள்ளத்துக்குள் விழுந்துவிட்டது.
இதனால், பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். இந்தச் சம்பவத்தில் சாரதி உள்பட 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. காரில் வந்தவர் சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்த மருத்துவர் பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.
மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடைப்பெற்று வருவதால், வீதியில் இந்த திடீர்ப்பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி குணசீலன், “எப்போதும் போல பஸ், நிலையத்தில் பஸ்ஸை நிறுத்தினேன். முன்பக்க டயர், திடீரென பஞ்சர் ஆவது போல இருந்தது. பஸ் கீழே இறங்கியதை உணர்ந்ததும் அதன் பின்னரே டயர் பஞ்சர் அல்ல, வீதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது.
அப்போது, பயணிகள் மொத்தம் 35 பேர் இருந்தனர். அவர்களுக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை. அருகில் வந்த கார் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துவிட்டது’’ என்றார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago