2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகளுக்கு சேதம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தொட்டலங்க, கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாகபொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (27) 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

இவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X