Freelancer / 2025 நவம்பர் 29 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிட்வா புயலின், மையத்தின் பின்பகுதி தற்போது கடலுக்குள் சென்றுள்ளதாகவும், புயலின் மையம் அமைதி கொண்டுள்ளதால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
எனினும், டிட்வா புயலின் மையப்புள்ளி தற்போது கடலை நோக்கி செல்வதன் விளைவாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சற்று இதமான மழை நாளைவரை தொடரும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை, மணிக்கு 40 - 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வேகமாக வீசக்கூடும் எனவும், காற்றின் வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, இன்று இரவு இதன் வெளி வளையமும் முற்றாக நாட்டைவிட்டு வெளியேறும் எனவும், மழை குறைந்தாலும் குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.
இந்த புயல் இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால், வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
எனவே கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026