2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கரும்புகை வெளியேற்றுவோருக்கு எதிராக நடவடிக்கை

Freelancer   / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவ்வாறான வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது வீதிகளில் கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குவதற்கு விசேட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அத்தகைய வாகனங்களின் இலக்கத் தகடுகள் அல்லது காணொலி ஆதாரங்களை 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .