Editorial / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கறுவாத்தோட்ட பொலிஸாரால் அதிரடியாக இன்று (08) கைது செய்யப்பட்ட திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, மொடல் ஜூலா பத்மேந்திரா அகிய இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த 04ஆம் திகதி திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டு மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சை நிறைவுக்கு கொண்டுவரப்படாத நிலையிலேயே மேற்படி இருவரும் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம், வாக்குமூலம் பெற்றுக்கொண்டு பிணையில் கையொப்பம் பெற்றுக்கொண்டதன் பின்னர், எதிர்வரும் 19ஆம் திகதியன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

25 minute ago
39 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
40 minute ago
50 minute ago