Freelancer / 2024 ஜூன் 22 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
குளிர்பானம் மற்றும் இனிப்பு வகைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை அவர் ஆரம்பிக்க உள்ளார்.
முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பானம், இனிப்பு வகை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்தார்.
இதற்காக கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பும், சலுகையும் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் விரிவாக்கமாகவே, இந்தியாவில் இந்த தொழிற்சாலையை முத்தையா முரளிதரன் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தொழிற்சாலை நிர்மாணத்திற்காக 46 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. R
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026