2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கறுப்பு ஊடகங்கள் குறித்து ஜனவரியில் விவாதம்: பிரதமர்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களுடைய வரவு-செலவுத்திட்டம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்தது என்றார். 

எனினும், ஒக்டோபர் 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாற்றத்தினால், அதனைச் செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டது என நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, எரிபொருட்களின் விலை குறைப்பையும் அறிவித்தார்.

அதுமட்டுமன்றி, தன்னுடைய  உரையை ஊடகங்கள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுமா? எனக் கேட்ட அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்குப் பின்னர் கறுப்பு ஊடகங்கள் இருந்தன. அவ்வாறான ஊடகங்கள் தொடர்பில், ஜனவரி மாதம் விவாதம் நடத்தப்படும் என்றும் அதனை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X