J.A. George / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உடன் இன்று(08) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர், தனியார் பஸ் சேவைபணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சங்கம் கூறியுள்ளது.
தனியார் பஸ் தவணை கட்டணத்துக்கான வட்டியை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தனியார் பஸ் சங்கம் முன்னர் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில் பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய சகல நிவாரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஸ் போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு தேவையான மாற்று நடவடிக்கைககளுக்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026