Ilango Bharathy / 2022 ஜனவரி 23 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னால் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கல்லடி பிரதான வீதியில், ஆரையம்பதி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் மீது பிக்கப் வாகனம் மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இதனையடுத்து பிக்கப் மோதிய வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திர வாகனத்துக்குள் மோட்டார் சைக்கிள் சிக்கியதாகவும், இதில் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஆரையம்பதியைச் சேர்ந்த சிவராசா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நெல் அறுவடை செய்யும் இயந்தரத்திர வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026