Editorial / 2026 மார்ச் 31 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட போத்தல் கள்ளுக்குள் இறந்த நிலையில் முழுப்பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம், மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மன்னாரில் உள்ள பிரபல மதுபான விற்பனை நிலையம் ஒன்றில், ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நபர் ஒருவரால் கள்ளுப் போத்தல் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. குறித்த போத்தலைத் திறந்து அருந்த முற்பட்டபோது, அதனுள் இறந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று மிதப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை: இந்தச் சுகாதாரச் சீர்கேடு குறித்து மன்னார் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் அல்லது விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
மன்னார் மாவட்டத்தில் இயற்கையான பனங்கள்ளு தாராளமாகக் கிடைக்கும் போதிலும், அண்மைக்காலமாகப் பலரும் இலகுவாகக் கிடைக்கும் 'போத்தல் கள்ளு' ரகங்களையே விரும்பி அருந்தி வருகின்றனர்.
"சுத்தமான முறையில் அடைக்கப்படுவதாகக் கூறி விற்பனை செய்யப்படும் இவ்வாறான போத்தல்களில் பல்லி போன்ற உயிரினங்கள் காணப்படுவது, நுகர்வோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும்" எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ரொசேரியன் லெம்பட்
3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago