2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காணாமற்போனோருக்கான ‘மரணச் சான்றித​ழ் வழங்கவில்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்   

காணாமற்போன ஆள்கள் சார்பாக, எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கப்படவில்லையென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்தது.   
நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது நசீர், கேள்விகளை எழுப்பினார்.  

காணாமற்போன ஆட்கள் சார்பான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிழ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை என்பதை, அமைச்சர் கூறுவாரா என்றும் இன்றேல் ஏன் எனவும் கேட்டார்.  

அந்தக் கேள்விக்கு, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, சபைக்கு ஆற்றுப்படுத்திய பதிலிலேயே, எந்தவொரு மரண சான்றிதழும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்றும் அடுத்தக் கேள்வி ஏற்புடையதல்ல என்றும் கூறினார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .