Editorial / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (56 வயது). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கணேசன், கடந்த ஒக்டோபர் மாதம் 22-ந் திகதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து இறந்ததாக பொதட்டூர் பேட்டை பொலிஸில் அவரது மகன் புகார் செய்தார்.
அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கணேசனின் குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால், அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக காப்புறுதி நிறுவனம், வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.
அதன்பேரில் பொலிஸ் நடத்திய விசாரணையில், கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள காப்புறுதி இருந்தது தெரியவந்தது. அதனை பெறுவதற்காக, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மணவூரை சேர்ந்த பாலாஜி (28 வயது), பிரசாந்த் (35 வயது), நவீன் குமார் (28 வயது), ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (28 வயது) ஆகியோருடன் சேர்ந்து தங்களது தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிகரன் உள்ளிட்ட 6 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். காப்புறுதி பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து மகன்களே தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 minute ago
12 minute ago
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
17 minute ago
24 minute ago