2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கால்வாயில் மீட்கப்பட்ட சடலம்

J.A. George   / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெஸ்பேவ பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவர் 5.06 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பச்சை நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .