Freelancer / 2025 நவம்பர் 12 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கிவுல் ஓயா' நீர்த்தேக்க திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மீதான கட்டமைக்க இன அழிப்பின் வடிவமாகும் என தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டினார்
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள், வயல் காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின், (எல்)வலய பிரிவால் 'கிவுல் ஓயா' நீர்த் தேக்கத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியாவின் பூர்வீகத் தமிழ்மக்களுக்குப் பாதகமான கிவுல் ஓயா திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். கிவுல் ஓயாத் திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள éர்வீகத் தமிழ்மக்களின் பத்திற்கும் மேற்பட்ட சிறிய நீர்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படவுள்ளது என்றார்.
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago