Janu / 2026 மே 05 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாககண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டுக்கச்சிய, தங்கஹவெல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நாராயண முதியன்சேலாகே அமில சந்தருவன் நாராயண என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் எனவும், அதன் காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து சுமார் 10 வருடங்களாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்தவர் என்றும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் நற்பண்புகளுடன் வாழ்ந்த இவர், பின்னர் போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியுள்ளார். அவரை அந்த பழக்கத்திலிருந்து மீட்பதற்கு அவரது தந்தை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தங்கியிருந்து போதைப்பொருள் பாவனையாளர்களுடன் இணைந்து நடமாடியுள்ளதோடு, போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில் பல திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
உயிரிழந்தவருக்கு எதிராக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சில குற்றச்சம்பவங்களுக்காகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இவர் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

22 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
35 minute ago