Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 22 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தூரப் பிரதேசங்களிலுள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும் பௌத்த புனருத நிதியத்தால் விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்றது.
46 விகாரைகளுக்காக 195 மில்லியன் ரூபாய் இதன்போது அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன், உரிய விகாரைகளின் விகாராதிபதி தேரர்களிடம் ஜனாதிபதி காசோலைகளை வழங்கி வைத்தார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த புனருத நிதியத்தால் 2016ஆம் ஆண்டில் 116 மில்லியன் ரூபாயும் 2017ஆம் ஆண்டில் 167 மில்லியன் ரூபாயும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
பௌத்த புனருத நிதியத்தின் கீழ் குறைந்த வசதிகளை உடைய விகாரைகள் தற்போது உரியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப முப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர்களின் உதவியும் தொழிற்பங்களிப்பும் அந்நடவடிக்கைகளுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
காணிப் பிரச்சினைகள் காணப்படும் விகாரைகளுக்கு காணி உறுதிகளை வழங்கி வைப்பதன் ஊடாக அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் ஜனாதிபதியால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago