2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’கூட்டணியை அசைக்க முடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள தங்களது கூட்டணியை, எவராலும் அசைக்க முடியாது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களது கட்சிக்கோ அல்லது தங்களால் உருவாக்கப்படும் ஜனநாயக தேசிய முன்னணிக்கோ, எவரும் எதிரிகள் இல்லை என்று கூறிய அவர், இந்த முன்னணியை, எவராலும் அசைக்க முடியாது என்றும் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலோ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவாலோ, ஐ.தே.கவை வீழ்த்திவிடலாம் என்று கனவிலும் நினைக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .