Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், கொக்கெயின் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனரென, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமையானது, அமைச்சர்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனரென, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், நேற்று (21) சந்தித்து மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே, தாம் முகம் கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளனர் என்றும், அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கூற்றானது, அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு மட்டுமன்றி, தங்களுக்கும் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதென சுட்டிக்காட்டியபோது, அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி விவகாரம் தொடர்பில், ரஞ்சன் ராமநாயக்க, தன்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லையென்றார்.
அதுமட்டுமன்றி, சபாநாயருக்கு எழுத்துமூலமாகப் பட்டியலைக் கொடுக்கவில்லையென, இதன்போது தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேலே குறிப்பிட்ட விவரம் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அக்குழுவின் அறிக்கையை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
48 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
7 hours ago