J.A. George / 2025 நவம்பர் 17 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண், கொழும்பு 13, பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர்.
சந்தேக நபர் இந்தக் குற்றத்தைச் செய்ய வெளிநாட்டில் இருந்த ஒரு குற்றக் கும்பலைத் தொடர்பு கொண்டு, குற்றவாளிகளுக்கு ஒரு காரையும், கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் தகவல்களையும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .