Gavitha / 2021 ஜனவரி 25 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொடர்ந்தும் உருமாறிக்கொண்டேதான் இருக்குமென்று தெரிவித்த அமெரிக்காவின் மருத்துவதுறை தலைவர் வை;ததியர் விவேக் மூர்த்தி, அதைத் திறம்பட எதிர்கொள்வதற்கு, கொரோனா மரபணுச் சங்கிலியை கண்டறியவும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என்றும' கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பாதிப்பு ஏற்படுகின்றபோதுதான், அதன் வகைகளை தாம் அடையாளம் காண முடியும் எனவும் அதனால், சிறந்த மரபணு ரீதியிலான கண்காணிப்பை தாம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.
மக்கள் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து கடைப்படிப்பதோடு, ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும், அவர் கோரினார்.
கொரோனா கிருமி உருமாறுவதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லையெனத் தெரிவித்த அவர், அதுதான் வைரஸின் இயல்பு எனவும் கூறினார்.
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மாத்திரமின்றி, தென் ஆப்பரிக்காவில் கண்டறிந்த புதிய ரக கொரோனா, பிரேசில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான பி.1 ஆகியவை வேகமாக பரவும் தன்மை உடையவை எனவும் கூறினார்.
'அவற்றில், பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பாதிப்பை அறிந்துகொள்ள, மேலும் அதிக புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன' எனவும், அவர் தெரிவித்தார்.
இந்தப் பாதிப்பை திறம்பட எதிர்கொள்வதற்கு சிகிச்சை நடைமுறைகளை மேம்படுத்தவும், தொற்று பரவல் தொடர்பு சங்கிலியைக் கண்டறியவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிக முதலீடுகளைச் செய்வது மிக அவசியம் எனவும், அவர் தெரிவித்தார்.
42 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
7 hours ago