2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவம்; உறுப்பினரை நீக்குகிறது மொட்டு கட்சி

Nirosh   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புத்தேகம கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேசச​பை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் கட்சி அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்தார்.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இக்கொள்ளைச் சம்பவத்துடன் எமது கட்சியின் பிரதேசசபை உறுப்பினருக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரது பிரதேசச​பை உறுப்பினர் பதவியை பறிப்போம் எனவும் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X