2024 மே 14, செவ்வாய்க்கிழமை

கோட்டாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பான வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் 2012- 2014 வரையான காலப்பகுதிகளில் எவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்துக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையின் நடத்துவதற்கு அனுமதியளித்தன் மூலம் அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி பாதுகப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .