S. Shivany / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் விமல் வீரவன்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ப வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் கூறியமைக்கு, மன்னிப்புக் கேட்க தான் தயார் என அமைச்சர் விமல் வீரவன்ச பதில் வழங்கியுள்ளார்.
அதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவப் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என விமல் அண்மையில் தெரிவித்த கருத்தால் ஆளும் கட்சிகளுக்கு இடையில் தற்போது பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியை மேலும் பலப்படுத்தவே தான் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, தகுந்த காரணங்கள் சிலவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது மஹிந்த அலை உருவாக முன்னின்று உழைத்தவன் தான் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பாடுபட்டோரில் தானும் ஒருவன் எனவும் கூறியுள்ள அவர் இவை தவறாயின் தான் மன்னிப்புக் கேட்க தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்க்கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026