2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார்’

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற முன்னெடுப்புகளை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச் செல்கின்றார் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று  (16) இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 14ஆம் திகதி, நாடாளுமன்றில் பிரதமரை நீக்குவதற்காகக் கொண்டுவந்த பிரேரணை அங்கிகரிக்கப்பட்டும் இன்னும் தான்தான் பிரதமர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மஹிந்த ராஜப க்‌ஷவையும் அவர்களுடைய அரசாங்கத்தையும் இன்றைய நிலையிலும் நாங்கள் நம்பிக்கையில்லாமல் இருக்கின்றோம்.

எனவே, சபாநாயகர் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்களை ஏற்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். அவர் நியாயமாக, தைரியமாகச் செயற்படுகின்றார். அவருடைய செயற்பாட்டில் நாங்கள் எந்தவொரு குறைகளையும் காணவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .