Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 6 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற வெளிநாட்டு சமூக ஊடகவியலாளர்கள் இருவர் திங்கட்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய நாட்டை சேர்ந்த 22 வயதுடைய ஆண் ஊடகவியலாளர் மற்றும் 30 வயதுடைய பெண் ஊடகவியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து இந்தியாவின் பெங்களூரு நகருக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பெங்களூருவிலிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான 6E-1183 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள், 5 பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 06 கிலோ 401 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பயணிகள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், அவர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
டி.கே.ஜி.கபில

9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago