2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

.’சவாலாக ஏற்றே அழைத்து வந்தேன்’

Editorial   / 2021 ஜனவரி 05 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தள சர்வதேச விமான நிலையத்தில், ஜனவரி 2ஆம் திகதியன்று வந்திறங்கிய உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 173 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

'விமான நிறுவனத்தால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 173 பேருக்கும், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் அறிக்கைகளின் பிரகாரம் இவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது' என்றார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் பிரஜைகள் 394 பேரில், இருவருக்கு மாத்திரம் தொற்றுக்கான அறிகுறி காணப்படுவதால், அவர்கள் ஹோட்டல் அறைகளிலேயே தங்கியிருந்துஇ சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களாக, இலங்கையின் விமான நிலையங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படாத நிலையில், பிரதமரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடன் பஷில் ராஜபக்ஷவின் முழுமையான மேற்பார்வையின் கீழ், முதற்கட்டமாக உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்ததாகத் தெரிவித்தார்.

'என்மீது எவ்வித குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் பரவாயில்லை. இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டே செய்ய முன்வந்தேன். நான் ஒன்பது வருடங்கள் சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால், அவர்களுக்கான தேவையை நன்கறிவேன். எனவே, எந்த விமர்சனம் வந்தாலும் எமது நாட்டுக்கு, சுற்றுலா வர்த்தகம் மிகவும் அவசியம். அதிக வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலா வர்த்தகத்தை, நிறுத்தினால் பாரிய நட்டம் ஏற்படும்' என்றார். 

தன்னை விமர்சித்தாலும் பரவாயில்லை. இந்தச் சுற்றுலா வர்த்தகத்தை மீண்டும் மேலெழுப்புங்கள். அனைவரது ஒத்துழைப்பையும் தனக்கு பெற்று தாருங்கள் எனத் தெரிவித்த உதயங்க வீரதுங்க, தான் தனது கடமையை நிறைவேற்றுவதாகவும் இதன்கீழ் ரஷ்யா, உக்ரைன், கஸகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும்  சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாகவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .