S.Renuka / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission), தற்போது அந்தந்த பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடங்களுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன்,, தனியார் விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk இற்குச் சென்று, தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
தனியார் விண்ணப்பதாரிகள் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், இணையதளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களைச் செய்துகொள்ள வேண்டும்.
இறுதித் திகதி: திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் பெப்ரவரி 10ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடையும். இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களுக்குப் பின்வரும் இலக்கங்கள் ஊடாகப் பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள முடியும்:
அவசர அழைப்பு இலக்கம்: 1911
தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537
பெக்ஸ் (Fax): 0112784422
மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago