Freelancer / 2025 ஒக்டோபர் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான குணசேகரம் மரியதாஸ் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தராவார்.
உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026