Editorial / 2019 ஒக்டோபர் 27 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்க 96 டன் எடையுள்ள ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 85 அடி ஆழத்துக்கு சென்றது.
குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், தற்போது 85 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றுவிட்டது. குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது
ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழிதோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தையை மீட்பதற்காக காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத இந்திரம் கொண்டு வரப்பட்டது. சுமார் 2 மணி அளவில் ரிக் இயந்திரம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து ராட்சத எந்திரமான 96 டன் எடையுள்ள ரிக் இயந்திரத்தை நிறுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டமாக குழி தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரிக் இயந்திரத்தின் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி வரை தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆள் இறங்குமளவுக்கு 1 மீட்டர் அகலத்தில் குழி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் குழியில் விழுந்து 40 மணி நேரத்தை கடந்து விட்ட நிலையில் சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்க பட வேண்டும் என்பது மக்கள் அனைவரது வேண்டுதலாக உள்ளது
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago