2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

’சுங்க அதிகாரிகள் எவருமே கலர் கண்ணாடிகளை அணியார்’

Editorial   / 2021 ஜனவரி 29 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத் திணைக்களத்தில் உள்ள அனைவரும் திருடர்கள் என்றால், இத்தனை நாள்களும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டவர்கள் யார், எனக் கேள்வி எழுப்பியுள்ள சுங்கத் தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் சுதத்.டீ.சில்வா, ஏனைய அரச திணைக்களங்களை விட, சிறப்புத் தகுதி உடையவர்களே சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றுகின்றனர். சுங்க அதிகாரிகள் எவருக்கும் அடிபணியாமல், கலர் கண்ணாடிகளை அணியாமல், பொது எண்ணத்துடன் செயற்படுபவர்கள் என்றார்.

சுங்கத் திணைக்களத்தை விட வேறெந்தத் திணைக்களத்திலும் தகுதியான அதிகாரிகள் இல்லை எனத் தெரிவித்த அவர், எனினும் ஜனாதிபதியின் கருத்துக்குப் பின்னர், சுங்கத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மோசமானவர்கள் என்ற எண்ணம், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்றார்.

கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், சுங்கத்தில் உள்ள அனைவரையும் துரத்தி விட்டு, தான் இதைச் செய்யப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதைப் பார்க்கும் போது, சுங்கத்தில் சிறந்த அதிகாரிகள் இல்லை என்ற எண்ணம் ஏற்படலாம். இதனால் சிறப்பாகச் செயற்படும் அதிகாரிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகலாம் என்றார்.

ஜனாதிபதி கூறிய முழுமையான கருத்தில், எமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனால், இதன் ஊடாகத் தவறான தீர்மானங்கள் எடுப்பதற்கு வழி உள்ளது. நாம் அதைத் தடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும் சிலர், வரி தொடர்பான தீர்மானங்களை எடுப்பவர்கள், சுங்கத் திணைக்களத்துடன் கலந்துரையாடி, சரியானதைச் செய்வார்களாயின் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என்றார்.

தொழிற்சங்கம் என்ற ரீதியில்இ சில யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. அந்த யோசனைகளைச் செயற்படுத்தினால்இ சுங்கத் திணைக்களம் மேலும் உயரிய இடத்துக்குச் செல்லும். எமது யோசனையின் பின்னர்இ லலித் வீரதுங்கவின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி முன்வந்தார். இறுதியில் அங்குமில்லாமல்இ இங்குமில்லாமல் 28 பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்துஇ கலந்துரையாடலை முன்னெடுக்க முடியாத நிலைக்கு வந்துள்ளது. இதைச் செய்தது யாரென ஜனாதிபதி ஆராய வேண்டும்.

சுங்கத் திணைக்களம் எத்தனை சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளது; இன்றும் முன்னெடுக்கின்றது. இன்றும் அரசாங்கம் உருவாக்கியுள்ள வரி கொள்கையுடன்இ மஞ்சள் இறக்குமதித் தடையுடன் கறுப்புச் சந்தைகள் உருவாகியதுடன் பல வர்த்தகர்கள் மஞ்சளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயற்சித்தனர்.

இவ்வாறு முயற்சித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது அதிகாரிகள்இ சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து மஞ்சளைக் கைப்பற்றினர்.
இதுவரை 1இ117 மெற்றிக் தொன் மஞ்சள் கைப்பற்றப்பட்டு திணைக்களத்தில் உள்ளது. இந்தச் சுங்க அதிகாரிகள் சகலரும் மோசமானவர்கள் என்றால்இ இவ்வாறான தொகையை எம்மால் கைப்பற்றியிருக்க முடியாது.

தூதுவராலய அதிகாரி ஒருவரின் பெயரில்இ மூன்று கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 12 வாகனங்கள் தொடர்பில் விசாரணை செய்துஇ சரியாகக் கண்டுபிடித்தோம். அமைச்சரொருவர் அழுத்தம் விடுத்துஇ அரச நிறுவனங்களில் எதையும் செய்யும் நிலை உள்ளது. ஆனால்இ சுங்கத்தில் அவ்வாறு செய்ய முடியாது. இதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்

சுங்கக் கட்டளைச் சட்டத்துக்கு அமையவே அதிகாரிகள் செயற்படுவார்கள். யாருக்கும் அடிபணியாமல்இ சுயாதீனத்துடன் செயற்படுவர். இன்று நாட்டுக்கு முதுகெலும்பை நேராக வைத்துஇ வேலை செய்யும் அரச அதிகாரிகளே தேவை. 
சுங்க அதிகாரிகள்இ அரசியல்வாதிகளின் தேவைகளுக்குச் செவிசாய்க்கும் அரச அதிகாரிகள் இல்லை. அதனால் சுங்கக் கட்டளைச் சட்டத்தை மாற்றும் தேவை இதன் பின்னணியில்  பலருக்கும் உள்ளது எனத் தெரிவித்த அவர்இ சுங்க அதிகாரிகள் எவருக்கும் அடிபணியாமல் கலர் கண்ணாடிகளை அணியாமல்இ பொது எண்ணத்துடன் செயற்படுபவர்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .