Editorial / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில், நஸீர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் அளித்துள்ள சுய விளக்கத்தை, மக்களிடத்தில் தெரிவித்து, செய்த தவறுக்காக அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம்இ ஒரே குழுவாக இருந்துஇ இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கான அந்த உறுதியையும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் தாருஸ்ஸலாமில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. அதில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தங்களது சுய விளக்கங்களை அளித்தார்கள். தங்களது பிரதேசங்களிலும் அதேநேரம் தங்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் சில விடயங்களை அரசாங்கத்தினூடாகச் செய்து கொள்வதற்கான தேவைப்பாடு இருக்கின்ற விவகாரங்களைச் சாதித்துக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர்' என்றார்.
'அதேநேரம், கடந்த காலங்களிலும் மாறி மாறி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்திருந்த போதிலும்இ வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசாங்கங்கள் தவறு விட்டிருக்கின்றன. அந்த வகையில், தாங்கள் செய்தது தவறல்ல என்ற தோரணையிலும் பதிலளித்திருந்தார்கள்' என்றார்.
முஸ்லிம்களின் மன உணர்வுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு முடிவு காண்பதற்கான கோரிக்கையை முன்னிறுத்தித்தான் இந்த 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு வாக்களித்ததாகவும் விளக்கமளித்தனர். எனினும், அரசாங்கத்தால், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்துத் தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் உறுதிபடக் கூறினர் என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில், அதை அவர்கள் பகிரங்கமாகச் செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க வேண்டுமெனத் தெரிவித்த ஹக்கீம், அந்த நிபந்தனையின் பேரில், அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
கேள்வி: இந்த நால்வருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள், எதிர்காலத்தில் எப்படியிருக்கும்?
பதில்: எதிர்காலத்தில், கட்சியோடு சேர்ந்து பயணிக்கப் போகின்றார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் அந்த நடவடிக்கைகள், இனித் தீர்மானிக்கப்படும்.
கேள்வி: திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இராஜினாமா கடிதம் கையளித்ததாக அறியக்கிடைத்திருக்கின்றது. அது சம்பந்தமாக உங்களது பதில்?
பதில்: இது சம்பந்தமாகத் தனது சுய விளக்கத்தை கொடுக்கின்ற போது கட்சிக்கு, தலைமைக்கு இது அபகீர்த்தியான விடயமாக வந்திருக்கின்றது என்பதை முன்னிட்டு, தன்னுடைய உயர்பீடப் பதவியிலிருந்து சுயமாக விலகிக் கொள்கின்றேன் என்ற கடிதத்தை, ஏற்கெனவே என்னிடத்தில் தந்திருந்தார்.
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago