Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு, நாகையில் கட்சித் தொண்டர் ஒருவர் வேல் பரிசாக அளித்தார். அதனை பெற்றுக்கொண்டு உற்சாகமாக கையசைத்தார் விஜய். இந்நிலையில், விஜய் வேலை ஏந்தியபோது காலில் செருப்பு அணிந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) யினர் விமர்சனம் வைத்துள்ளனர். "காலில் செருப்பு அணிந்தபடியே வேலை பிடித்த ஜோசஃப் விஜய். இந்து மதத்தை பற்றி தெரியுமா?" என பாஜக தொண்டர் ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் 'வேல்' தொடர்ச்சியாக பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு வேல் அன்பளிப்பாக அளிப்பது, முருகன் பற்றிப் பேசுவது என அதைச் சுற்றி அரசியல் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசே அண்மையில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டையும் நடத்தியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யும் வேல் ஏந்தியுள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள உள்ள விஜய் சனிக்கிழமை (20) அன்று நாகை மாவட்டம், அண்ணா சிலை அருகே இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது,"எல்லாருக்கும் என் அன்பான வணக்கம். எப்படி இருக்கீங்க? பண்றீங்களா? கடல்தாய் மடியில் இருக்கும் நாகப்பட்டினத்தில் நின்று பேசுவதால் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த ஊர் என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது" என்று பேசத் தொடங்கினார்.
மேலும், "விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க காவிரி தண்ணீரை கொண்டு வர அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. கடல்சார் கல்லூரி, மீன் தொழிற்சாலை போன்றவை அமைக்க முடிந்திருக்கலாம். ஆனால் இன்று வரை செய்யப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை பற்றி சிரித்துக்கொண்டே பேசும் முதல்வர் சார் நேர்மையாக சொல்லுங்க, வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில்தான் முதலீடா?" என்று கேள்வி எழுப்பினார் விஜய்.
இந்நிலையில், விஜய் வாகனம் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார். அப்போது, தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக அளித்தார். விஜய் வேலை பெற்றுக் கொண்டு தொண்டர்களிடம் காண்பித்தபடி கையசைத்தார். தமிழக அரசியல் களத்தில் வேல் முக்கியப் பாத்திரம் வகித்து வரும் சூழலில் திருச்சியில் முதல் பிரச்சார பயணத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய்க்கு, அக்கட்சித் தொண்டர்கள் முருகனின் வேலை பரிசாக வழங்கினர். அதேபோல நாகையிலும் பெரிய வேல் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், விஜய் வேலை ஏந்தியபோது செருப்பு அணிந்திருந்தார் பாஜகவினர் விமர்சனம் வைத்துள்ளனர். "காலில் செருப்பு அணிந்தபடியே வேலை பிடித்த ஜோசஃப் விஜய். இந்து மத்தத்தை பற்றி தெரியுமா? தமிழ்நாட்டில் உள்ள நடுநிலை இந்துக்கள், இந்து இளைஞர்கள், தோழிகள் தான் உணர வேண்டும்..." என பாஜக தொண்டர் ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ் கடவுள் முருகனை விஜய் அவமதித்து விட்டதாகவும் விமர்சித்துள்ளனர்.
விஜய் பற்றி பாஜக தொண்டர்கள் மத ரீதியில் விமர்சனம் வைத்த நிலையில், தவெக தொண்டர்கள் அந்த நபருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அன்பளிப்பாக கொடுத்த வேலை செருப்பு அணிந்தபடி வாங்கியது குற்றமா என பதிவிட்டு வருகின்றனர். முன்பு, அண்ணாமலை காவடி தூக்கியபோது காலணி அணிந்திருந்ததைக் குறிப்பிட்டும் பலர் விமர்சித்துள்ளனர்.
32 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago