Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 22 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் முன்னணியில், புதிய பதவி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, ஜனநாயக மக்களை முன்னணியின் செயலாளர் நாயகமாக மேல்மாகாணசபை உறுப்பினர் கே.ரீ. குருசாமியும் தேசிய அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
கட்சியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டத்தில், கட்சியின் புதிய பதவி மாற்றங்களும் நியமனங்களும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டன.
கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்சியில் செயலாளர் நாயகம் எனும் புதிய பதவி உருவாக்கப்படும் யோசனையை கட்சியின் யாப்பு திருத்தமாக தலைவர் மனோ கணேசன் முன்மொழிய, அதை பிரதித் தலைவர் வேலுகுமார் வழிமொழிந்தார்.
இதையடுத்து பின்வருவோர் உரிய பதவிகளுக்காக முன்மொழியப்பட, அவற்றை அரசியல் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
செயலாளர் நாயகம்: கே.ரீ.குருசாமி, தவிசாளர்: ஜெயபாலன் பொன்னுசாமி, பொருளாளர்: கணேசன் கந்தசாமி, தேசிய அமைப்பாளர்: பிரகாஷ் கணேசன், அமைப்பு செயலாளர் (வட கிழக்கு): ஜனகன் விநாயகமூர்த்தி, அமைப்பு செயலாளர் (தென்னிலங்கை): சண் பிரபாகரன், பிரசார செயலாளர்: பரணி முருகேசு, கொழும்பு மாவட்ட அமைப்பாளர்: பாலசுரேஷ் குமார் மருதப்பன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க பொதுச்செயலாளர்: மூக்கன் சந்திரகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
59 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
7 hours ago
7 hours ago