Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை இன்று (23) வெளியிட்டு இதனை பிரதமர் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் அல்லது சட்டமா அதிபர் ஆகியோருக்கே உயர் நீதிமன்ற நீதியரசரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் அமைப்பினை தான் ஒரு போதும் மீறப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர், அவ்வாறு அரசியலமைப்பினை மீறியவர்கள் குறித்து உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
23 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago