Freelancer / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் முன்னால் வெடிப்பதற்கு தயாராக "டெல்டா குண்டு" உள்ளது என்றும் மக்கள் கவனமாக இல்லாவிட்டால் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
இந்த டெல்டா வெடிகுண்டு இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் வெடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
குண்டை அழிவடையச் செய்வதா, இல்லையா என்ற முடிவு மக்களின் கைகளில் உள்ளது என்றும், மக்கள் தங்கள் பயணங்களை கட்டுப்படுத்தாமல், சரியான சுகாதார சட்டங்களை பின்பற்றாவிட்டால், வெடிகுண்டு அவர்களின் வீடுகளை சென்றடையும் என்றும் அவர் எச்சரித்தார்.
கொரோனா தடுப்பூசி உடனடியாக பெறப்பட வேண்டும் என்பதால் கொரோனா இறப்பைத் தடுக்க அனைத்து மக்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருகில் கிடைக்கும் எந்த தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசிகளைப் பெறும் போது மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், தடுப்பூசி கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவது முக்கியம் என்றும் விற்றமின் சியை தினமும் மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இஞ்சி, கொத்தமல்லியை ஒரு நாளைக்கு மூன்று முறை சீனி இல்லாமல் குடிப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago