Janu / 2026 மே 06 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
5 கிலோகிராம் தங்கம் தருவதாகக் கூறி 1,800 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபர்களான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முகங்கள் மூடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கொழும்பு, செட்டியார் தெருவை (Sea Street) சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
22 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
35 minute ago