Freelancer / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சரிவை நோக்கி செல்கின்றது.
அந்த வகையில் இன்றைய (22) தினம் இரண்டு தடவைகள் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 350,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் 340,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 322,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் பவுன் ஒன்று 312,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது. R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago