2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தந்தையை கொன்று தீ வைத்து எரித்த மகன்

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியில் இளைஞன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த நபர் தந்தையின் உடலை தீ வைத்து எரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய சந்தேகநபரான மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தாயின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X