2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வர்த்தகருக்கு எதிராக வலுக்கிறது எதிர்ப்பு

S.Sekar   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகரின் காம லீலைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

நட்சத்திர ஹோட்டல்களுக்கு வருகை தரும் இளம் பெண்களை தமது கையடக்க தொலைபேசியில் அவர்களின் அனுமதியின்றி இரகசியமான முறையில் வீடியோ பதிவு செய்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த தமிழ் பேசும் வர்த்தகரான என்.வி. திவாகரன் என்பவருக்கு எதிராக இவ்வாறு எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான ரோஹித ராஜபக்சவின் மனைவி டட்யானாவின் வளர்ப்புத் தந்தையான இவரின் செயற்பாடுகளை கண்டித்து ரோஹித ராஜபக்ச ட்விட்டர் பதிவை இட்டுள்ளார். அதில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவங்கள் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தாமும், தமது மனைவி டட்யானாவும் இந்த பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் என்.வி.திவாகரனுடன் சில ஆண்டு காலமாக எவ்விதமான தொடர்புகளையும் பேணவில்லை எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நபர் தமது செயற்பாட்டுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், சினமன் கிரான்ட் ஹோட்டல் நிர்வாகம் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தாம் வலியுறுத்துவதாக ரோஹித ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .